மேலே கூறிய தகவல் உடைய நபர் திருமங்கலம் பாலம் கீழே சுற்றி திரிவதாக காவல் கரங்கள் மூலம் தகவல் கிடைத்தது.அங்கு சென்று அவரை பார்த்த போது அரைகுறை ஆடையுடன், உடைகள் மிக அலுக்காகவும் கிழிந்தும் இருந்தது. அவரிடம் பேச்சுக்கொடுத்த போதும் தகவல் கிடைக்கவில்லை.
பின்பு காவல் நிலையத்திற்கு சென்று மெமோ பெற்று அவரை மன நல காப்பகத்தில் சேர்த்தோம்.
வழியில் செல்லும் போது மதிய உணவு சாப்பிட்டு இரவு உணவும் வாங்கி கொடுத்துவிட்டு காப்பகத்தில் சேர்த்துவிடுவந்தோம். ஏனோ ஒரு சிறு கலக்கம் மன நலம் பாதிக்கப்படவர்களை விடும் போது நம்மை விட்டு பிரிய மனம் இருப்பதில்லை. அவர்களுடன் மனம் விட்டு பேசத்தான் ஆட்கள் இல்லை.
அவரை பற்றி தகவல் கிடைத்தால் தொடர்புகொள்ளவும்.